பாகிஸ்தானில் பரிதாபம் - ஓடும் ரயிலில் தீ பிடித்து 68 பேர் பலி!

Thursday 31, October 2019, 20:48:17

இன்று காலை பாகிஸ்தானில் கராச்சி-ராவல் பிண்டி சென்றுகொண்டிருந்தா ஒரு ரயிலில் திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மிக வேகமாக அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியது.

தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பலர் உயிர் தப்புவதற்காக அலறியடித்துக்கொண்டு ஓடினர். சிலர் ரயிலில் இருந்து வெளியே பாய்ந்தனர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

தீப்பிடித்த பெட்டியை மட்டும் தனியே கழற்றி விட்டு மற்ற பெட்டிகளை வெகு தொலைவில் கொண்டு செல்லப்பட்டதால் உயிர்ச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்தில் இதுவரை 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz