திடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அனுமதி!

Wednesday 20, November 2019, 18:21:46

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் இராமதாஸை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கட்சி தொடங்கியதில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இராமதாஸ் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் அவரது மகன் அன்புமணி இராமதாஸ் கவனித்து வந்தார். சில சமயங்களில் மட்டுமே இராமதாஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்து வந்தார்.

இந்நிலையில், பாமக நிறுவனர் இராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீவிர காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது இராமதாஸ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz