27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி: அதிமுக 15 இடங்களிலும், திமுக 12 இடங்களில் வெற்றி; திருச்சியை திமுக கைப்பற்றியது

Saturday 11, January 2020, 23:27:23

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 15 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் தர்மன் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித்தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடக்கிறது. மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கும், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் மதியம் 3.30 மணி என நடந்து வருகின்றது. இதில் 27 மாவட்டங்களின் ஊராட்சி தலைவர்கள் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியானது.

அவற்றில் அதிமுக 14 இடங்களையும், திமுக 12 இடங்களையும் பிடித்துள்ளது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

1. திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் தர்மன் ராஜேந்திரன் வெற்றி
2. கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் வெற்றி
3. பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
4. தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா வெற்றி
5 அரியலூர் மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி
6. ஈரோடு மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் நவமணி வெற்றி
7. நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பொன்தோஸ் வெற்றி
8. திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் வெற்றி
9. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யா வெற்றி
10. திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி
11, சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவராக பாமக வேட்பாளர் ரேவதி வெற்றி
12. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு
13. நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் சாரதா தேர்வு
14. தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ப்ரீத்தா தேர்வு
15. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் திசைவீரன் வெற்றி
16. கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் திருமாறன் வெற்றி
17. மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி
18. திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வெற்றி
19. விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் வசந்தி மான்ராஜ் வெற்றி பெற்றார்.
20. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பார்வதி வெற்றி பெற்றார்.
21. நாகை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார்.
22. குமரி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் மெர்லின்தாஸ் வெற்றி பெற்றார்.
23. தருமபுரி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் யசோதா வெற்றி பெற்றார்.
24. கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் மணிமேகலை வெற்றி பெற்றார்.
25. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பாஸ்கரன் வெற்றி பெற்றார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz