திருச்சியில் 14 ஒன்றியக்குழு தலைவர்களையும் கைப்பற்றிய திமுக; வெற்றிக்களிப்பில் கே.என்.நேரு

Saturday 11, January 2020, 23:30:50

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித்தலைவர், துணைத் தலைவர், ஒன்றியத்தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

kn nehru
அதன்படி திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒட்டு மொத்தமாக திமுக அள்ளியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியக்குழு தலைவர்களுக்கான தேர்தலில் 14 ஐயும் திமுக கைப்பற்றியது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1. புள்ளம்பாடி - ரஷ்யா ராஜேந்திரன்,
2. மண்ணச்சநல்லூர் - ஸ்ரீதர்,
3. தொட்டியம் - புனிதாராணி,
4. த.பேட்டை - சர்மிளா,
5. மணப்பாறை - அமிர்தவள்ளி,
6. மருங்காபுரி - பழனியாண்டி,
7. மணிகண்டம் - கமலம்,
8. திருவெறும்பூர் - சத்யா,
9. உப்பிலியபுரம் - ஹேமலதா,
10. அந்தநல்லூர் - துரைராஜ்,
11. முசிறி - மலர்,
12. வையம்பட்டி - குணசீலன்,
13. லால்குடி - ரவிச்சந்திரன்,
14. துறையூர் - சரண்யா என 14 ஒன்றியங்களையும் திருச்சி மாவட்டத்தில் திமுக கைப்பற்றியது.

திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் அதிமுக ஒரு ஒன்றியத்தைக்கூட கைப்பற்றாதது திருச்சி அதிமுக கட்சியினரிடத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெற்ற அனைத்து ஒன்றியக்குழு தலைவர்களும் இன்று மாலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக கே.என்.நேரு ஒவ்வொரு ஒன்றித்திலும் வெற்றி பெற்றவர்களை அந்தந்த ஒன்றியங்களுக்கே நேரடியாக சென்று கை குலுக்கி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz