பெல் குடியிருப்பில் கடைகளுக்கு தடை

Tuesday 24, March 2020, 01:17:40

திருசு்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கொரொனோ பீதி காரணமாக பெல் நிர்வாகம் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பெல் நிறுவன ஊழியர்களான பணிநேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கேன்டீன் மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களையும் பெல் நிர்வாக மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பெல் ஊழியர் குடும்பங்கள் தாய் களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz