சேலம்: கொரோனா-தீவிர கண்காணிப்பில் சந்தேகமான 16 பேர்!

Wednesday 25, March 2020, 22:38:01

சேலம் மாவட்ட ஆட்சியர் இராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

இந்தோனேசியாவில் இருந்து கடந்த 11.03.2020 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்து அன்று சூரமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட ரகமத்நகர் மசூதிக்கும், 13.03.2020 முதல் வரை செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்திற்குக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை பாரமார்கட் மசூதிக்கும், 16.03.2020 முதல் 18.03.2020 வரை அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட ஷேக்உமர் மசூதிக்கும், 19.03.2020 முதல் 2103.2020 வரை சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட சன்யாசிகுண்டு புகாரியா மசூதிக்கும், 22.03.2020 அன்று சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஜனாத்தூல் பிர்தோஷ் மசூதிக்கும் சென்று மதபோதனைகளில் ஈடுப்பட்டு வந்த 11 நபர்கள் மற்றும் அவர்களுடன் வழிகாட்டியாக வந்திருந்த சென்னை சேர்ந்த ஒரு நபர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 நபர்கள் என மொத்தம் 16 நபர்கள் சேலம் அரசு மோகன்குமராமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைப்பதற்காக இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்

மேலும், இந்நபர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவே, மேற்குறிப்பிட்டுள்ள 5 மசூதிகளுக்கும் மதபோதனைகளுக்கு இந்நபர்கள் சென்று வந்துள்ளதால் இவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அம்மசூதிகளுக்கு வருகை தந்திருந்த அனைத்து நபர்களும் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0427 - 2450022, 0427 - 2450023 மற்றும் 0427 - 2450498 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz