‘தனிமை’ ஆட்கள் ஊர் சுற்றினால் பாஸ்போர்ட் பறிமுதல் - திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

Wednesday 25, March 2020, 21:58:08

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

மாா்ச் 1ம் தேதி முதல் வௌிநாட்டில் இருந்து வந்த நபா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களின் வீடுகளில் எச்சாிக்கை போஸ்டா் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் தனிமைபட்டு இருக்க வேண்டும், வீட்டை விட்டு வௌியில் செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த நபா்களில் சிலா் வீட்டில் தனிமைபட்டு இல்லாமல், சமுதாய மக்களோடு வௌியில் உலாவிக்கொண்டிருப்பதாக திருச்சி மாவட்ட நிா்வாக அலுவலகத்திற்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

அவ்வாறு நடந்து கொள்பவா்களின் பாஸ்போா்ட்டுகள் முடக்கப்படுவதோடு, அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் குடும்ப உறுப்பினா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz