போலி தரிசன டிக்கெட் அச்சடிப்பு: அமைச்சரின் உறவினர் சஸ்பெண்ட்!

Wednesday 25, March 2020, 22:39:56

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கடந்த ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான, தரிசன டிக்கெட் அச்சடித்து விநியோகம் செய்தலில் ₹2 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அக்கோவிலின் உதவி ஆணையர் M.ஜோதிலட்சுமி இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா IAS பிறப்பித்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள M.ஜோதிலட்சுமி, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி நடராஜனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஒட்டுமொத்த அறநிலையத்துறை அதிகாரிகளும் பதட்டத்தில் உள்ளனர். இப் பிரச்சனை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz