திருச்சி , புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருநாவுக்கரசர் எம்பி ₹60 லட்சம் நிதியுதவி!

Wednesday 25, March 2020, 22:17:49

மக்களை பெரும் துயரிலும் சிரமத்திலும் உடல் மற்றும் மன உளைச்சலிலும் ஆட்படுத்தியிருக்கும் வரலாறு காணாத கொடுமையான தொற்று கிருமியாம் கோரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (வெண்டிலேட்டர், முக கவசம், Hand Sanitizer) போன்ற நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ₹10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு திருச்சி கிழக்கு மேற்கு , திருவரம்பூர், திருவரங்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ₹40 லட்சமும் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் ₹20 லட்சமும் ஆக மொத்தம் ₹60 லட்சம் திருச்சி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதல்கட்டமாக வழங்கப்படுவதாக திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz