தொகுதி மக்களுக்கு கே.என்.நேரு வழங்கிய மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்!

Wednesday 25, March 2020, 22:23:37

திருச்சியில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளர் கேஎன்.நேரு  கொரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக தொகுதி மக்களுக்கு 2500 மாஸ்க்,சோப்பு, கை சுத்தம் செய்யும் திரவம் (சேனிடைசர்) ஆகியவற்றை மாநகர மற்றும் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz