விடுமுறை கேட்டும் கிடைக்காத விரக்தியில் மின் வாாிய ஊழியா் தீக்குளித்துத் தற்கொலை

Saturday 29, September 2018, 18:27:13

தர்மபுாி மாவட்டம், கடத்தூா் அருகே புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சண்முகம். தமிழ்நாடு மின் வாரிய ஊழியரான இவா் பென்னாகரம் அடுத்துள்ள சிக்கம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தாா்.

அண்மையில் பூபெய்திய தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும் என்பதற்காக தனது உயர் அதிகாரியிடம் சண்முகம் விடுமுறை கேட்டு, அவர் விடுமுறை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த சண்முகம் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் நேற்று மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர்.

உடலெங்கிலும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சண்முகம் தர்மபுாி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மருத்துவா்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz