மே 31-ம் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள்.

Sunday 17, May 2020, 21:45:47

மே 31-ம் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பின் முழு விபரம் வருமாறு:

* பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயம்.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி.

* இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை

* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.

* அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* பேருந்து பொதுப்போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

* அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம்.

* மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது.

* பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.

* கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதி இல்லை.

* பொது இடங்களில் மது,புகையிலைப்பொருட்கள் பயன்படுத்த தடை.

* திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் சமூக இடைவெளி அவசியம். 50 நபர்களுக்கு மேல் கூட தடை   விதிக்கப்படுகிறது.

* பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

* பள்ளி. கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

* அனைத்துவிதமான பயணிகள் விமானசேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை.

* மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு செய்யப்படும்.

* மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மத்துடன் இயக்கலாம்.

* மெட்ரோ ரெயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

* விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

* விமானம், ரெயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும்

* வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு.

* ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம்.

* பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz