மாற்றுத்திரனாளிகளுக்கு பிரத்யேக கொரோனா எதிர்ப்பு மாஸ்க்!

Saturday 23, May 2020, 00:57:19

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பேச்சுதிறன் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு அசைவு கொண்டு மொழிபெயர்க்கும் பிரத்தியேக முககவசம் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1500 மதிப்பிலான அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று வழங்கினார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பேச்சுதிறன் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு அசைவு கொண்டு மொழிபெயர்க்கும் பிரத்தியேக முககவசம் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 32 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா ரூபாய் 1500 மதிப்பிலான அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 48,000 மதிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார்.

masksk

இந் நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz