திருச்சி பெல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Saturday 23, May 2020, 01:05:33

மத்திய அரசு தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதையும், சாதிய ரீதியாக பல்வேறு செயல்பாடுகளை தொழிலாளர்கள் மத்தியில் திணிப்பதை கண்டித்து திருச்சி பெல் நிர்வாகம் சார்பில் இன்று மாலை வாயில் தோறும் கருப்புக்கொடி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளர் உரிமைகளை பறித்து அடிமைப்படுத்தும் சாதியை எதிர்த்து பாரத மிகுமின் நிலையத்தில்( BHEL-ல் ) உள்ள அனைத்து வாயில்களிலும், மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடியுடனும் மத்திய அரசை கண்டித்த பதாகைகளுடனும் பிஎம்எஸ் தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

bhel2

அதைத்தொடர்ந்து பெல் ஆளையினுள் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தொழிலாளர்களும் கருப்பு badge அணிந்து மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz