சமையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.பி.!

Saturday 23, May 2020, 11:41:37

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திருமணங்கள், பிற சடங்குகள் யாவுமே ரத்து செய்யப்பட்டதால் சமையல் தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனை அறிந்த முன்னாள் எம்.பி. ப.குமார் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நலிவடைந்த சமையல் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வழங்கினார்.

திருச்சி அதிமுக மாநகர் எல்லைக்குட்பட்ட 300 சமையல் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், சோப்பு, சானிடைசர் பாட்டில்கள், முககவசங்கள் அடங்கிய தொகுப்பு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வழங்கினார்.

aiadmkss

இந்நிகழ்வில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அருள்ஜோதி, மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார், பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் (எ) கோபால்ராஜ், மணிகண்டம் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ்பாண்டியன், அமராவதி கூட்டுறவு சங்க தலைவர் ஏர்போர்ட் விஜி, மற்றும் பொன்மலை முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன், வட்ட கழக செயலாளர்கள் ராஜா, சபாபதி, தண்டபாணி மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு கொரோனா நிவாரணக்களத்தில் சேவையாற்றினர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz