திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திமுக மத்திய மண்டலமான தென்னூர் பகுதியில் இன்று காலை முதல் கொரோனா நிவாரண களத்தில் தொய்வின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு காய்கறிகளை வழங்கினார் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு.
திருச்சி மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட தென்னூர் சவேரியார் கோவில் தெருவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் அருண் நேரு ஆகியோர் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோருக்கு காய்கறி தொகுப்புகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், பகுதி செயலாளர் கண்ணன், வட்டச் செயலாளர்கள் காளை, தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.