இராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் 773 பேர் தங்கள் சொந்த ஊருக்குச் சிறப்பு ரயிலில் சென்றனர்!

Saturday 23, May 2020, 01:29:35

இராஜஸ்தான் மாநிலத்திற்கு திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த 773 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்சனில் இன்று இரவு சிறப்பு ரயில் மூலம் சமுக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வழியனுப்பிய பின்பு மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்ததாவது;

தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

rajest
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 30, தஞ்சாவூர் மாவட்டத்தி;ல் 45, திருவாரூர் மாவட்டத்தில் 17, அரியலூர் மாவட்டத்தில் 38, கடலூர் மாவட்டத்தில் 30, பெரம்பலூர் மாவட்டத்தில் 03, புதுக்கோட்டை மாவட்டத்தில் 33, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 62, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 33, விழுப்புரம் மாவட்டத்தில் 23, திண்டுக்கல் மாவட்டத்தில் 19, தேனி மாவட்டத்தில் 24, ராமநாதபுரம் மாவட்டத்தில் 33, காரைக்கால் மாவட்டத்தில் 23 ஆகிய 14 மாவட்டங்களில் பணிபுரிந்த வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 413 நபர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தி;லிருந்து 360 நபர்களும் ஆக மொத்தம் 773 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தின் 20 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சனுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இரவு உணவு, வாட்டர் பாட்டில், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டு இன்று இரவு இராஜஸ்தான் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 நபர்கள் சிறப்பு வாகனம் மூலம் இன்று இரவு சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவரவர்களின் மாநிலத்திற்கு நாளை சிறப்பு இரயில் மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

rera

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz