காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவத்தில் காந்தியடிகள் சிறப்பு தபால்தலையை வெளியிட்டனர்.
மினியேச்சர் அஞ்சல் தலையாக வெளியிட்டதில் ரூ 5,12, 20, 41. 22,25, 25 மதிப்பிலான வட்ட வடிவான தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன. இளம் வயது மகாத்மா காந்தி, ராட்டையில் நூல் நூற்கும் காந்தி, சமாதான புறாவுடன் காந்தி, நோயாளிக்கு உதவும் காந்தி என படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தபால் தலைகள் திருச்சி தபால் தலை சேகரிப்பு மையத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும், மகாத்மா காந்தி 150 ஆண்டை முன்னிட்டு 150 நாட்களில் 150 கண்காட்சியினை நடத்தி வரும் மகாத்மா காந்தி அஞ்சல்
தலை சேகரிப்பாளருமான விஜயகுமார் மற்றும் தபால் தலை சேகரிப்பு பிரிவு பொறுப்பாளர் ராஜேசிடம் இருந்து காந்தியடிகள் சிறப்பு அஞ்சல் தலை முதல் நாள் உறையினை ஆர்வமுடன் பெற்றுக்கொண்டார்.