கெஜ்ரிவால் அதிரடி:அரசு பதவியில் உள்ள கணவன், மனைவி இருவரில் ஒருவர் கட்டாய ராஜினாமா!

Sunday 07, June 2020, 22:48:32

கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும். அது மாநில அரசாக இருந்தாலும் சரி. மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி. இருவரில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய
அரசு வேலை தர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாகத் திட்டமிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சரின் புதிய திட்டத்தால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்திட்டத்தை உடனடியாக அவர் செயல்படுத்த வேண்டுமென்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மீண்டும் அவரே முதல்வர் என பொதுமக்களிடமிருந்து முதல்வருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்

2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை வழங்கபடும்

3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும் . ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract சம்பளம் Rs. 10, 000 மட்டுமே வழங்கபடும்.

3. திருமணம் ஆகாத, ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது சட்டபடி குற்றம்

4. இத்திட்டத்தின் படி குறைந்தது ஒருகோடிக்கு அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு மாநில அரசு வேலை கிடையாது.

6. இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும் , வேலைக்கு சேர்ந்தது முதல் 30 வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம்

7.ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒருகோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

8. இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் போது தற்போதுள்ள கல்விதகுதி, உடற்தகுதி, எழுத்துதேர்வு தகுதி, ஜாதி தகுதி, பிற சிறப்பு தகுதி(வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்... ) மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

a. ஒருகோடிக்கு மேல் குடும்ப சொத்து அல்லது வருமானம் இருக்ககூடாது.

b. குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

c. இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

d.ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்

f. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

g. வேலைக்கு சேர்ந்தவர்கள் எந்தெந்த தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியபடுத்த படும்.,

h. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கீழ்கண்ட் நன்மைகள் நடைபெறும்

a. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.

b. சமூகத்தில் குற்றங்கள் குறையும்

c. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியபடுத்துவார்

d. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால் , அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.

e. பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்

f. திருமணம் ஆகாத அரசு ஊழியர் இரண்டு பேர் திருமணம் செய்யும் போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.

g. குழந்தைகள் உள்ளவர்களுக்கு புதிதாக அரசு பணியில் முன்னுரிமை என்பதால் அந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்

h. 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்ககூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கபடும்

i. இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பலகோடி பேருக்கு அரசு வேலை கிடைக்கும்.

j. இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

k. ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாக சில தகுதிகளை சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்

i. கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

j. எந்தெந்த தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம் வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும் அரசு வேலையில் தரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும். ,

k. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz