துணைவேந்தரை நியமனம் செய்வது ஆளுநர் மட்டுமே” – அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி!

Sunday 07, October 2018, 21:25:29

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ரோஹித் அண்மையில் நடைபெற்ற “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் “தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று பகிங்கரமாகக் குற்றம் சாட்டி ஆளுங்கட்சியினர் மற்றுமல்லாது அனைவரையும் அதிர வைத்தார்.

துணைவேந்தர் நியமனம் செய்வது ஆளுநர் மட்டுமே என்றும் கட்சிக்கமிட்டி அமைப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது என ஆளுநரின் பேச்சுக்குப் பதிலடியினைத் தரும் வகையில் தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தர்மபுரி அருகே செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா 06.10.2018 அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்துச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:

“துணைவேந்தர் பொருத்தவரையில் ஆளுநர் மட்டுமே நியமனம் செய்யப்படுவதாகவும், அரசானது நியமனம் செய்வதில்லை. அதோடு மட்டுமல்லாமல் துணைவேந்தர் பதவிக் காலம் முடியும் பட்சத்தில் அதற்கு (சர்ச்-கமிடி) தேடுதல்குழு போன்று அமைக்கப்படுகிறது.  அந்த தேடுதல் குழுவும் மாற்றியமைக்கப்பட்டது  ஓய்வுபெற்ற நீதிபதிகளை தேடுதல் குழு தலைவராக நியமனம் செய்ய வேண்டுமென்று அரசானை வெளியிடப்பட்டு அதன் மூலமாக சர்ச்-கமிட்டி தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்படுகிறது.  

அந்த நியமனம் செய்வது அரசு அல்ல ஆளுநர்தான் என்றும் மற்றொருவரை சிண்டிகேட் உறுப்பினர்கள் சர்ச்-கமிட்டி தேர்வு செய்யவேண்டும்.  அரசு மூலமாக ஒருவரை தேர்வு செய்து கொடுக்கிறோம் என்றார். மேலும், அரசு மூலமாக தேர்வு செய்யும் நபர்கள் 10-ஆண்டுகாலம் பேராசிரியர்களாக பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது சிறந்த கல்வியாளராகவோ, ஓய்வுபெற்ற துணைவேந்தர்களாகவோ, முதன்மைச் செயலாளர்கள் பணியிலே பணியாற்றி கொண்டவர்களாகவும், இருக்கலாம்.  அப்படி பெற்றவர்களை அரசு நியமனம் செய்து கொடுக்கிறது. 

சர்ச்-கமிட்டி அமைப்பதோடு உயர்கல்வி சம்மந்தமில்லாமல் அரசின் கடமை பூர்த்தியாகிறது என்றும், சர்ச்-கமிட்டியில் உள்ள மூன்று நபர்களும் சேர்ந்து எந்த பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் பதவி காலியாக இருக்கிறதோ அதற்காக முன்மொழிவு பெறுகிறார்கள்.  

முன்மொழிவு பெற்று அவர்களாகவே 150-நபர்கள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் வரவேண்டுமென்று முன்மொழிவு கொடுக்கப்பட்டால் அதில் தேர்வு செய்து மூன்று நபர்களை மட்டுமே ஆளுநரிடம் சமர்பிக்கின்றார்கள். அவர்களை ஆளுநர் நேரடியாக நேர்காணல் நடத்தி துணைவேந்தர் நியமனம் செய்கிறார்.  இன்றைக்கு துணைவேந்தர் அரசுக்கோ அல்லது உயர்கல்வித் துறைக்கோ எந்தவிதமான சம்மந்தமும் இல்லை” என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz