கொரோனாவால் பலியானவரின் உடலை பொக்லைன் எந்திரம் எடுத்துச்செல்லும் அவலம்!

Saturday 27, June 2020, 22:51:09

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவரின் உடலை பொக்லைன் இயந்திரத்தில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், உடல்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

ஆனால், ஒரு சில இடங்களில் இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலசா நகரில் கொரோனா வைரசால் இறந்த 70 வயது முதியவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி எந்திரத்தில் எடுத்துச் சென்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் இருந்து உடலை ஜேசிபி எந்திரத்தின் மூலம் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வீடியோ பதிவு வைரலாக சமூக ஊடகங்களில் உலா வருவது அதிர்ச்சியளிக்கின்றது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz