சாத்தான்குளம் விவகாரம்; திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Sunday 28, June 2020, 22:42:38

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருச்சியில்  விடுதலைச் சிறுத்தைகள்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து கடை திறந்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் தாக்கிய சம்பவத்தால் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பெருத்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்குதலில் பலியான தந்தை, மகன் குடும்பத்திற்கு நீதி கேட்டும், போலீஸார் மீது இரட்டைக்கொலை வழக்கு பதியக்கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vc

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மக்கள் உரிமை கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராகவும், காவல்துறையின் செயல்களை கண்டித்தும் குரல் கொடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சு, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் தங்கதுரை, கணியமுதன், ஆல்பர்ட், அரசு, ஜெய்கணேஷ், புல்லட் லாரன்ஸ், சதீஷ், குணா, முல்லை வளவன், செல்வகுமார், வின்செண்ட், அல்பர்ட் ஹென்றி நீலவாணன், முத்தழகன், இனியவன், தங்கராஜ், சதா உட்பட திரளானோர் கலந்துக் கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz