கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்!

Sunday 28, June 2020, 22:47:18

திருச்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியை கொரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு மையமாக மாற்றியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வரும் நாட்களில் யாத்ரி நிவாஸ்க்கு கொரோனா நோயாளிகள் அனுப்பப்பட உள்ளனர்.

திருச்சியில் ஒட்டுமொத்தமாக 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 199 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 4 நபர் உயிரிழந்துள்ளார் என்பது அரசு தரப்பில் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை விட மாநகராட்சிப் பகுதியில் தொற்று அதிகமாக இருக்கிறது.

இதன்படி, திருச்சி மாநகராட்சியில் கோட்டவாரியாக அதிகபட்சமாக ஸ்ரீரங்கத்திலும் அதற்கு அடுத்தபடியாக கோ அபிசேகபுரம் கோட்டத்திலும், பொன்மலை கோட்டத்திலும், அரியமங்கலம் கோட்டத்திலும் தொடர்ந்து கொரோனா தொற்றாலர்களின் எண்ணிக்கை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

இதனையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றியிருக்கின்றது மாவட்ட நிர்வாகம்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz