விருதுகளுக்கு விண்ணப்பிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!

Tuesday 30, June 2020, 01:49:17

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, சேவை புரியும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிபவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. தகுதியான வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;

cls
திருச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிபவர்கள், சிறப்பாக சேவை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 15.08.2020 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வ.எண் விருதுகள் விவரம் விருதின் வகை

1 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் ரூபாய்.50000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்
2 மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
3 மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
4 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
5 சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
மொத்தம் 6 விருதுகள்

மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், சார்நிலைக் கருவூலம் அருகில், கண்டோன்மென்ட், திருச்சி, என்ற முகவரியில் உள்ள அலுவலரிடம் நேரில் விண்ணப்ப படிவங்கள் பெற்று 30.06.2020க்குள் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண் 0431-2412590ற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz