திருச்சி 14-வது வட்டம்: அதிமுகவில் இணைந்த திமுகவினர்!

Tuesday 30, June 2020, 01:51:32

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு திமுக வட்ட கழக துணைச் செயலாளர் ஏ.கல்யாணி மற்றும் வட்ட கழக நிர்வாகி ஏ.லோகநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி திமுகவினர் அஇஅதிமுகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலக்கரை பகுதி கழக செயலாளர் டி.ஏ.எஸ்.கலிலுல் ரகுமான் செய்திருந்தார். அதிமுக அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரும் உடனிருந்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz