பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருச்சி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

Tuesday 30, June 2020, 01:54:27

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மிக குறைவாக இருக்கும் போதும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி பெட்ரோலியப் பொருட்களை அதிக விலைக்கு விற்று மக்களை வஞ்சித்து வருகிறதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் அருகில் உள்ள தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஊடக பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் மேயர் சுஜாதா மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வக்கீல் சரவணன், தொட்டியம் சரவணன், வக்கீல் சந்திரன், பேட்ரிக் ராஜ்குமார், ஜி.கே.முரளிதரன், ரெக்ஸ், மாவட்ட நிர்வாகிகள் முரளி, சிவா, உறையூர் எத்திராஜூ, அண்ணாசிலை விக்டர், வழக்கறிஞர் விக்னேஷ், வர்த்தக காங்கிரஸ் கணேசன், மீனவரணி தனபால் மகேஷ், கங்கானி ராஜா, டேனியல், கோட்ட தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, குழந்தைவேல், முத்து, ஜெரால்டு மற்றும் வார்டு தலைவர்கள் சரவணன், கனகராஜ், கண்ணன், பத்மநாபன், ஜாகீர் உசேன், மலர் வெங்கடேசன், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மகேஷ்வரன், மன்னார்புரம் வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

rex

மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் சைக்கிளோடு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz