கொரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்ட தருமபுரி - ஓசூர் பிரதான நெடுஞ்சாலை!

Sunday 12, July 2020, 23:36:29

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளியில் கொரோனா வைரஸ் தொற்றால் தருமபுரியிலிருந்து ஓசூர் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டது.

ஒரு கிராமத்தில் தொற்று ஏற்பட்டால் கிராமத்தை மூடலாம்; ஆனால் நெடுஞ்சாலையை மூடினால் நோயாளிகளைச் சுமந்தபடி அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம்., இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பாலக்கோடு பகுதியில் பணியில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் எவ்வாறு செல்வது? என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விவகாரத்தில் உள்ளாட்சி அதிகாரிகளின் ஆலோசனையை மீறி வருவாய்த்துறையினர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக உள்ளாட்சி பணியாளர்கள் வேதனைப் படுகின்றனர்.

வருவாய்த்துறையினரைக் கேட்டாலோ இது எங்கள் முடிவல்ல; மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு என்கின்றனர். எப்படி இருந்தாலும் நெடுஞ்சாலையை முடக்குவது என்பது சரியான முடிவல்ல மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடுநிலைமையாளர்களின் கருத்தாக உள்ளது.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz