லெபனானை உலுக்கிய பெய்ரூட் குண்டு வெடிப்பு!

Wednesday 05, August 2020, 00:54:05

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது அந்நாட்டை உலுக்கியது, ஆனால் இந்த குண்டு வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிற்பகலில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.

துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், குண்டுவெடிப்பை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை. விபத்தா அல்லது சதி செயலா என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அந்நாட்டின் மிக மோசமான குண்டு வெடிப்பு இது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த குண்டு வெடிப்பால் எவ்வளவு பேர் மாண்டார்கள் என்ற தகவலும் வெளியாகவில்லை. பெய்ரூட்டில் எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். .

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz