லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கிய காரிமங்கலம் சார்பதிவாளர்!

Tuesday 16, October 2018, 17:58:24

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக   அதிக அளவில் லஞ்சம் புழங்குவதாக தருமபுரி லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், நேற்று மாலை தருமபுரி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சுப்பிரமணியன், ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர்,  காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையும், தணிக்கையும் மேற்கொண்டனர்.

காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத 47.536 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அப்பொழுது சார் பதிவாளர் அலுவலகத்தில்  கணக்கில் வராத ரூ.47, 786 இருப்பது தெரிய வந்தது.

 

சார்பதிவாளர் (பொறுப்பு)அருட்பெருஞ்ஜோதி மற்றும் இரண்டு தரகர்கள் உட்பட மூன்று பேர்மீது லஞ்ச ஒழபிப்பு தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து  அந்த தொகை போலீஸார்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சார் பதிவாளர் அருட்பெரும்ஜோதி(48), தரகர்கள் சேகர், பிரகாஷ் ஆகியோரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார்  தொடர் விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணை முடிவில் சார்பதிவாளர் மற்றும் 2   தரகர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz