உயர்நீதிமன்றத் தீர்ப்பு: தர்மபுரி அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

Friday 26, October 2018, 12:11:35

சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று பரபரப்பான தீர்ப்பு இ்ன்று வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிளக் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாடினர்.அப்பொழுது முதல்வருக்கு ஆதரவாகவும் டிடிவி தினகரனுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் தர்மபுரி மாவட்டம்  அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz