பட்டப்பகலில் பட்டாக்கத்திகளுடன் ரகளை செய்த ரவுடிகள் 5 பேர் கைது!

Saturday 10, October 2020, 01:44:24

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் சத்திரம் நாகம்மன் கோயில் அருகே பட்டக்கத்தியுடன் ஒரு கும்பல் சுற்றித்திருவதாக காவல் நிலையத்திற்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். மேலும் அந்த கும்பல் கொலை வெறியுட்ன் சுற்றித்திரிவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பாலக்கரை போலீஸார் அந்த ரவுடிக்கும்பல் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸாரை கண்டதும் 5 பேர் கொண்ட அந்த கும்பல் பட்டக்கத்திகளை கையில் தூக்கிப் பிடித்தவாறு ஓட்டமெடுத்தனர்.

போலீஸார் அவர்களை துரத்திப் பிடித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், முதலியார் சத்திரம் ஆசாரி தெருவை சேர்ந்த ராஜ்கமல் மற்றும் அவனது கூட்டாளிகள் தான் பட்டாக்கத்திகளுடன் ரகளை செய்தது தெரியவந்தது. ராஜ்கமலின் தந்தை சங்கர் என்பவர் ரவுடி சந்துரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்.

nife
எனவே சங்கரை கொலை செய்யும் நோக்கத்தில் ரவுடி சந்துருவின் கூட்டாளிகள் திட்டமிட்டிருந்ததை தெரிந்துக்கொண்ட ராஜ்கமல், தனது தந்தையை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில், ராஜ்கமல் தனது கூட்டாளிகளான மதுரையை சேர்ந்த முத்து கிருஷ்ணன், அஜய், பாலக்கரையை சேர்ந்த ஜோ பிரசாத், பொன்மலையை சேர்ந்த ஆனந்த் குமார் ஆகியோரை திரட்டி எதிர் தரப்பினரை கொலை செய்யும் நோக்கில் வட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாலக்கரை போலீஸார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது, மிரட்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜபடுத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் பட்டக்கத்திகளுடன் வாலிபர்கள் ரவுசு காட்டிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz