ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு துணையாக லட்சுமி!

Saturday 10, October 2020, 01:47:49

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதும் ஆகும். இங்கு வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் ஆண்டாள் என்ற யானை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த லட்சுமி மில்லுக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் கோவிலில் 20 வயதுடைய பிரேமி என்ற லட்சுமி யானை சேவை செய்து வந்தது.

அந்த யானை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. கோவையில் இருந்து லாரியில் ஏற்றி அழைத்து வரப்பட்ட யானை பிரேமி என்கிற லட்சுமி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

லட்சுமிக்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் நிர்வாகிகள் சார்பில் பெருமாள் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ரெங்கநாதர் கைங்கர்யங்களில் ஈடுபடுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz