திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி

Saturday 10, October 2020, 02:20:29

திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு பகுதியில் காவல் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு தமிழகத்தில் தேர்வாகும் போலீஸாருக்கு பயிற்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் தேனியை சேர்ந்த செல்லபாண்டியன் மகள் சமயுக்த்தா (திருநங்கை) என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவருடன் பயிற்சியில் ஈடுபட்டுவந்தவர்கள் சகஜமாக பேசிப் பழக வில்லையாம், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார். இதுதொடர்பாக தமது உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார் திருநங்கை சம்யுக்தா.

polic
இதனையடுத்து அவரது புகார் குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றனர் உயர் அதிகாரிகள். அவர்களும், இவரது பிறப்பு குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிகின்றது. இதனால் பெருத்த மன உலைச்சலுக்கு ஆளான சம்யுக்தா தனது பிறந்த நாளான இன்று ஸ்பிரிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக மீட்டு அவரை சிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை யளிக்கப்பட்டு வருகின்றது.

காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை விசமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றது குறித்து காவல் பயிற்சி பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோரிடமும், இவரது அறையில் தங்கியிருந்தவர்களிடமும் விசாரணையை துரிதப்படுத்தியிருக்கின்றார் மாநகர காவல் ஆணையர் லோகநாதன்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz