குடிநீர் குழாயைப் பொதுமக்களுக்கு அர்ப்பணித்த திமுக எம்.எல்.ஏ.!

Saturday 06, March 2021, 16:16:59

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அந்தந்த கட்சியினர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் முயற்சியாக கட்சிக்கு வேண்டியப்பட்டவர்கள், தொகுதி பொதுமக்களுக்கு வேண்டியப்பட்டவர்கள் என ஒவ்வொருவரையும் பார்த்து சரி செய்து பிரசார யுக்திக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் பொதுமக்கள் வைத்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதிலும், தொகுதியில் நிதி ஒதுக்கி முடிக்கப்பட்ட நலத்திட்ட பணிகளை தொகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.

mahesh
அந்த வகையில், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி, பொய்கைக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் நீர் குழாய் அமைத்து தர வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிய போர்வெல் மற்றும் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அசூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், திருவெறும்பூர் தொகுதி திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz