மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி நிறைவு - திருச்சி ஆட்சியர்

Saturday 06, March 2021, 16:08:39

திருச்சி பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை VVPAT சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-க்காக 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்தெந்த தொகுதிக்கு பிரித்து அனுப்புவது தொடர்பாக (Randomization) முதல் கட்டமாக கணினியில் குலுக்கல் முறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருமான சு.சிவராசு தலைமையில் தேர்வு செய்யப்பட்டு இன்று (06.03.2021) அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.சிவராசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக கணினியில் குலுக்கல் முறையில் எந்தெந்த தொகுதிக்கு என பிரிக்கப்பட்டது.

138 மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு 492 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 492 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 529 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT),

139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 528 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 528 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 568 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT),

140 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு 455 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 455 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 489 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT),

141 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 439 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 439 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 472 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ),

142 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 497 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 497 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 534 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT),

143 இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு 360 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 360 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 387 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ),

144 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 409 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 409 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 440 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ),

145 முசிறி சட்டமன்ற தொகுதிக்கு 398 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 398 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 428 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ),

146 துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 372 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 400 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ) என ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கு 3,950 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,950 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 4,247 தான் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும் (VVPAT ) அந்தந்த தொகுதிக்கு காவல் துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்படும்.

இன்று (06.03.2021) இரவுக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி நிறைவு பெறும். அவசர தேவைகளுக்காக 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

clsse

மேற்கண்டவாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சு.சிவராசு தெரிவித்தார்.

இப்பணியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்களும் கலந்து கொண்டனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz