மு.க.ஸ்டாலினின் தொடர் பிரசாரத்தால் தமிழகத்தில் எழுச்சி! - கே.என்.நேரு பேச்சு

Monday 08, March 2021, 17:49:32

திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுகவின் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று மாலை பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. திமுக வரலாற்றில் இதுவரை கண்டிராத தொழில் நுட்பத்தினை ஐ.பேக் டீம் செய்திருந்தது.

திடலில் எல்.இ.டி.சுவர்கள் அமைப்பு, வானவெடிகளின் பிரம்மாண்டம், கலை நிகழ்ச்சி என ஒரு இன்னிசை கச்சேரிக்கு இணையாக பொதுக்கூட்டம் அமைந்திருந்தது என்றாலும் திமுகவின் முன்னோடிகளை ஓரங்கட்டி வைத்திருந்தது என தொண்டர்கள் புலம்பியதையும் காண முடிந்தது.

இந்தக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்று பேசியதாவது;

1996-ம் ஆண்டு நடைபெற்ற திமுக மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கியதால், திமுக தலைவராக இருந்த கருணாநிதி கூட்ட மேடைக்கு வேனில் வர முடியாமல் இருசக்கர வாகனத்தில் வந்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அதேபோல இன்றும் காவல்துறை செய்த சிறு தவறால், மு.க.ஸ்டாலின் வேனை பாதியிலேயே நிறுத்திவிட்டு காரில் இங்கு வந்துள்ளார். மக்கள் கிராம சபை, உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் தான் வர்றாரு. விடியல் தர போறாரு என்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியது: கருணாநிதிக்கு பிறகு இந்த இயக்கத்தை கட்டுப்பாடுடன் கட்டிக்காக்கும் வல்லமை, அரசியல் தெளிவு, மக்களை ஈர்க்கும் சக்தி மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. கருணாநிதி மறைந்த 18 மாதத்துக்குள் கட்சியைக் கட்டுக் கோப்பாக கொண்டு வந்த பெருமை மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. எதிரணியில் இருந்தவர்களையும் தன் அணிக்கு கொண்டு வந்தவர். மக்களவைத் தேர்தலில் வெற்றியை நிலை நாட்டினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதுமையான திட்டத்தை பெரும்பாலான தொகுதிகளில் நடத்தி வருகிறார். 18 மாதத்தில் அவர் செய்த புதுமை, அரசியலில் மாற்றாரை வியக்க வைத்திருக்கிறது.பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை, கருணாநிதி இல்லாத வருத்தத்தை போக்கியுள்ளார். எங்கள் வாழ்நாளையும் சேர்த்து வாழ்ந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கட்டிக்காத்து வாழ வைக்க வேண்டும் என்றார்.

nehru1

முன்னதாக, மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத், சுப.வீரபாண்டியன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பாலசுப்பிரமணிய தீட்சிதர், மருத்துவர் எழிலன், வே.மதிமாறன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோரும் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பொதுக்கூட்டம் முடிவின்போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியிலான வாள் ஒன்றை நினைவு பரிச்சாக கொடுத்தார். ஐ.பேக்கின் அதிரடியால் தொண்டர்களுக்கும் அவர்களது குழுவினர்களுக்கும் அடிதடி வரை சென்றது. கட்டுக்கோப்பாக வைத்திருக்க எவ்வளவோ முயற்சித்தும் தொண்டர்கள் அதை மீறி மேடைக்கு அருகே திரண்டனர். அதிரடி காட்டிய வானவெடிகளால் விண்ணதிர்ந்தன.

மு.க.ஸ்டாலின் உறுதிமொழி; அனைத்து உரிமைகளையும் கொண்டதாக தமிழகத்தை மாற் றிக் காட்டுவோம். மக்களை பிளவு படுத்தும் எவரையும் கூட்டாக எதிர் நின்று தோற்கடிப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக் காட்டுவோம். சட்டம், ஒழுங்கை உறுதியோடு காப்பாற் றுவோம். சட்ட மீறல்களையும், குற்றச் சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித் தளம் அமைப்போம். 100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம். இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்” என இந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz