டெல்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து

Friday 02, November 2018, 12:36:05

டெல்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழையமான பெட்ரோல் வாகனங்களை டில்லியில் என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலத்தில் இயக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான பெஞச்முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி அரசு சார்பில் வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவுஎண்களை ரத்து செய்யப்பட்டுவிட்டது . மேலும், நவ. 30 முதல் டிச.30 வரை டில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் சாதனம் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz