பிரபல கன்னட நடிகரும், கர்நாடக அரசியல்வாதியுமான  அம்பரீஷ் மறைவு.

Sunday 25, November 2018, 21:34:31

பிரபல கன்னட நடிகரும், கர்நாடக அரசியல்வாதியுமான  அம்பரீஷ் நேற்று இரவு 9.30 மணிக்கு பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் காலமானார்.

அம்பரீசுக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஏற்பட்டதன் காரணமாக  அவரை பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும்  அம்பரீஷின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.இதன் காரணமாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சையினைத் தொடர்ந்து அளித்து வந்த நிலையில் அது பலனளிக்காமல்  இன்று இரவு 9.30 மணிக்கு  நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்துள்ளார்.

மரணமடைந்த நடிகர் அம்பரீஷ் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராகவும், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட நாளைய நெருங்கிய நண்பர். தமிழில் சூப்பர் ஹிட்டான ‘ப்ரியா’ திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்தவர் என்ற வகையில் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது இறுதி சடங்கிலும் பங்கேற்க பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு அம்பரீஷ் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கலங்கினார்.


நடிகர் அம்பரீஷ் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் ‘42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார் கமல்ஹாசன்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz