மலேஷியாவில் கார்த்திகை தீபத் திருவிழா! 

Sunday 25, November 2018, 22:21:16
 
இந்தியத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேஷியாவில் கோலாலம்பூர் பகுதியில் இந்தியத் திருவிழாக்கள் பெருவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு இணையாக ஆண்டுதோறும் இங்கு கார்த்திகை மாதத்தின்போது கார்த்திகை தீபத் திருவிழாவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
 
 
கோலாலம்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று  கார்த்திகை தீப திருவிழா விமர்சையாகக் கொண்டப்பட்டது. பலநூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு அரோகரா போன்ற கோஷங்களை உணர்வுப் பூர்வமாக முழங்கிட அங்கு தீபம்  ஏற்றப்பட்டது.
 
 
மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்கு ஏற்றினர். அனைத்து இந்தியர்கள்  வீடுகளின் முன்பும், இந்துக் கோவில்களிலும்  அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதால் காணுமிடமெல்லாம் ஒளிவெள்ளமாகக் காட்சியளித்தது. இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுபெற்றது.
© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz