7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன் தொடர் உண்ணாவிரதம் – த.வா.க தலைவர் வேல்முருகன் அறிவிப்பு

Sunday 02, December 2018, 22:14:48

தர்மபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தங்களது அடுத்தக் கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

“பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக வரும் 7ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தினமும் ஏழு பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று இன்று வேல்முருகன் அறிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது “கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளிக்க இருப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இதற்கு மத்திய நீர்வள ஆணையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.

அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாவிட்டால் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “இதையும் மீறி மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணைபோகுமேயானால் தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம், பிரச்சார பயணம் செய்வோம்” என்று தெரிவித்தார்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz