தர்மபுரி: ஏரியூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Monday 03, December 2018, 17:44:28

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே  உள்ள ஏரியூர் கிராமத்துக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் ஏரியூர் மக்கள் அக்டும் அவதிக்கு ஆளாயினர்.

இதுமாற்றிக் கூறப்படுவதாவது:

சாலை பராமரிப்பு பணிகளின் போது 8 மாதத்திற்கு முன்பு எரியூருக்கு  குடிநீர் வழங்கப் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக எரியூருக்குக் குடிநீர் வரத்து முற்றிலுமாகத் தடைபட்டது.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை குறித்துப் பொதுமக்கள் பல முறை BDO-விடம் கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் துண்டிக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களைப் பழுது பார்த்து மீண்டும் குடிநீர் இணைப்பு கொடுக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஏரியூர் கிராமப் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தத் திடீர் சாலை மறியல் காரணமாக பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்க முடியாதா நிலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏரியூர் கிராம மக்களின் கோரிக்கையினை அதிகாரிகளுக்குக் கொண்டு சென்று உரிய தீர்வு காண்பதாக காவல் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை ஏற்றுக் கொண்டு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது..

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz