கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரைவிட்ட புள்ளிமான்

Wednesday 05, December 2018, 19:15:49

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரகம் வேப்பம்பட்டி அருகே பொங்காலி கவுண்டர் என்பவரது  தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டரை வயது கொண்ட 60கிலோ எடையுள்ள புள்ளிமான் ஒன்று காட்டிலிருந்து வழிதெரியாமல் ஓடிவந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

கிணற்றுள் புள்ளிமான் விழுந்ததைக் கண்ட நிலத்துக்கு உரியவர்களும், அப்பகுதி மக்களும் தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையிருக்கும் இது குறித்து உடனடியாகத் தகவல் தந்தனர்.

தகவல் தெரிந்து  தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்துக்கு வந்த வனஅலுவலர்கள் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த ஆண் புள்ளிமனை மீட்கப் பெரும் போராட்டத்தையே நடத்தினர்.

ஏறத்தாழ 30 நிமிடங்கள் போராடிய பின்  புள்ளி மானைக் கிணற்றில் இருந்து அவர்கள் மீட்டனர். மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்ட அந்த மான்  சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

கிணற்றில் விழந்த புள்ளி மான் அதிகப்படியான நீரை குடித்தாலும் .கிணற்றில் விழும்பொழுது ஏற்பட்ட காயங்களாலும் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மானை கைப்பற்றி வனத்துறையினர் தீர்த்தமலை வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz