தர்மபுரி: சாலையில் நடனமாடி கஜா புயல் நிவாரணநிதி சேர்க்கும் நடனக் கலைஞர்கள்

Wednesday 05, December 2018, 21:18:42

தர்மபுரி மாவட்டம் அரூரில் மக்கள் கூடும் இடங்களிலும் குடியிருப்பு்பகுதிகளிலும் மொரப்பூரை சேர்ந்த சிவஞானம் நடனக்குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் திரட்ட 30 பேர் கொண்ட தமது நடன குழுவினருடன் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் பொதுமக்களிடம் டெல்டா விவசாயிகள் படும் வேதனைகளை எடுத்துரைத்தும் நிதி திரட்டினர்.

நேற்று முதல் வரும் பத்தாம் தேதி வரை அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி யில் பல்வேறு பகுதிகளில் நிதி திரட்டி அதில் கிடைக்கும் நிவாரணப் பொருட்களையும் பணத்தையும் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக நடனக் குழு தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz