புயலால் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி

Monday 10, December 2018, 15:10:08

கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒன்றேகால் இலட்சம் ரூபாயை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் நிதியுதவியாக வழங்கியது.

கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திடம் குவைத் வாழ் தமிழர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் வழங்கிய நிதியுதவியை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்ககழக அரபித்துறை பேராசிரியருமான மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ வசம் சங்கத்தின் தமிழகப் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.

குவைத்வாழ் தமிழ்ச் சகோதரர்களின் கொடையுள்ளம் போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த சகோதர, சகோதரிகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகலைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz