மலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது

Tuesday 18, December 2018, 20:05:58

மலேசிய கிள்ளான் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் ( மலேசியா முதல் கருங்கல் கோவில் )  வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம், சிறப்பாக கொண்டாடப்பட்டது . இன்று டிசம்பர் மாதம் 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக கூட்டம் கூட்டமாக உள்ளே சென்றார்கள். 

வைகுண்டஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 7 மணிக்கு சற்றுமுறை ஆராதனை மற்றும் 7.30 மணிக்கு வைகுண்டவாசல் திறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

அவதார புருஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. வாசலுக்கு மேலே சிற்ப வடிவில் இரண்டு தங்க பல்லிகள் பதிக்கப்பட்டிருக்கும், அதை பயபக்தியுடன் வணங்குவார்கள். பக்தர்கள் உலக பந்தங்களில் பற்று வைக்காமல், விலகி சென்றால் இறைவனின் சொர்க்கவாசல் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அதன் தத்துவம். 

வைகுண்ட ஏகாதேசியை பற்றி கூறும்போது, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்ர போரில் அர்ஜுனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை தரையில் வைத்துவிட்டு போரிட மறுத்துவிடுகிறான். வைகுண்ட ஏகதேசி அன்று பகவான் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்.

வைகுண்ட ஏகாதேசி அன்று இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இந்தவிளையாட்டில் ஏணி புண்ணியத்தையும், பாம்பு பாவத்தையும் குறிக்கும், புண்ணியம் செய்தவர்கள் ஏணிவழியே ஏறிச்சென்றால் சொர்கத்தை அடையலாம், சறுக்கி பாம்பு வழியில் விழுந்தால் கீழே விழுந்து இன்னல்கள் அடைவார்கள் என்பது பரமபதம் விளையாட்டு உணர்த்துகிறது.

தேவர்களும் அரசர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்து அமுதம் வெளிவந்த நாளும் வைகுண்ட ஏகாதேசி என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz