மேகதாது அணை கட்ட எதிர்ப்பு - நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள். 6வது நாளாக ஆர்ப்பாட்டம்!

Thursday 20, December 2018, 18:12:57

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள். இன்று 6வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி.க்களின் மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து திருப்பூர் எம்.பி #சத்தியபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

#மேகதாது அணை பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிள்ளார். மத்திய அரசு இது தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றம் என்பது மக்களின் கருத்தை கேட்டறியும் அமைப்பே. மத்திய அரசு, மேகதாது அணை கட்ட மத்திய நீர் வாரியம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும்.

மேகதாது அணை அமைக்கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் தண்ணீர் குறைந்து, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இது நாடாளுமன்றத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் மக்களின் முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் எம்.பி கூறியுள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz