மலேசியாவில் பணியாற்றும் இந்தியர்கள் நிலை

Friday 21, December 2018, 17:49:21
மலேசியாவில் இந்தியர்கள்: இந்தியாவின் பல்வேறுமாநிலங்களிலிருந்து வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக மலேஷியா பயணம் செய்கின்றனர். இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம், வணிகம், உணவு, மருத்துவம், கல்வி, எண்ணெய் நிறுவனங்கள், ஆன்மீகம், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் வேலைக்காக மலேசியாவில் பல்வேறு மாநிலங்களில் நீண்ட காலம் தங்கி பணியாற்றுகின்றனர். தனியாக வசித்து வருபவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உடன் இணைந்து வசிக்கின்றனர். திருமணமான பெரும்பாலானோர் சிறிது நாட்களுக்கு பிறகு தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து  குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். 
 
சிகிச்சை மற்றும் மருத்துவ காப்பீடு: மருத்துவ சிகிச்சை பொறுத்தவரை வெளிநாட்டவருக்கு மருத்துவ காப்பீடு மிகவும் அவசியமாகிறது, சாதாரண மருத்துவ செலவுகளுக்கு பக்கபலமாக அமைகிறது. சில தீவிர சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத்தொகையை விட நான்குமடங்கு வரை செலவு ஆகின்றது. மருத்துவமனைகள் வெளிநாட்டவர்களுக்கு தனி கட்டணம் நிர்ணயிக்கின்றனர் எனவே மருத்துவ காப்பீடு எடுத்திருந்தாலும் சில நேரங்களில் காப்பீடு தொகை காட்டிலும் அதிக பணம் தேவைப்படுகின்றது. 
 
மருத்துவமனைகள்: விபத்து, உடல்நலக்குறைவு போன்ற எதிர்பாராத காரணங்களால் உயிர் இழக்கின்றனர். மருத்துவ செலவு போக மேலும் உடலை எம்பல்மிங், சீலிங் செய்து இந்தியாவிற்கு கொண்டுசெல்ல மேலும் பல ஆயிரங்கள் தேவைப்படுகின்றது. உறவினர்களுக்கு பிரியமானவர்களை இழந்த துக்கமான சூழலில் இது பேரிடியாக அமைகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்திய தூதரகத்தை அணுகுவது மற்றும் ஆவணங்கள் தயார் செய்வது போன்ற நடைமுறை அறியாது விழிக்கின்றனர். இறப்பு பதிவு செய்து உரிய ஆவணங்கள் பெற்ற பிறகே உடலை கொண்டுசெல்ல அனுமதிக்க படுவது நடைமுறையில் உள்ளது. எனவே இறந்தவரின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டுசெல்ல மலேசியாவிற்கான இந்திய தூதரகம் இறப்பை பதிவு செய்த ஆவணங்களை சரிபார்த்து தடையில்லா சான்று வழங்குகிறது. அணைத்து நடைமுறைகளை நிறைவுசெய்ய, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சராசரியாக குறைந்தது ஒன்று முதல் அதிகபட்சம் மூன்று நாட்கள் ஆகின்றது. 
 
இறப்பு: மலேசியாவில் இந்தியர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை கடந்த ஆறு மாதங்களில் 218 பேர் இறந்துள்ளதாக மலேசியாவிற்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் இறந்தவர்களின் பதிவு விபரங்களை அந்தந்த நாட்களிலேயே வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இதில் பெயர், இறப்பு பதிவு செய்த நாள், பெற்றுக்கொண்டவர்கள் குறிப்பு, புறப்படும் விமான விவரங்கள் மற்றும் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
நண்பர்கள் உதவி: இதுபோன்ற காலங்களில் மலேசியாவில் உள்ள இந்திய நண்பர்கள் இறந்தவர்களின் குடும்பத்தார்க்கு பல்வேறு  உதவிகளை செய்கின்றனர். இந்திய குடியுரிமை கொண்ட மலேஷியா வாழ் தமிழர்கள் போன்ற அமைப்புகள் தங்களை அணுகும் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அனைவரும் ஒன்றுகூடி பண உதவி மற்றும் ஆவணங்கள் பெறுவது போன்ற பல்வேறு வகைகளில் உறுதுணையாக நிற்கின்றனர். இந்திய தூதரகத்துடன் இணைந்து குடும்பத்தாருக்கு மனிதாபிமானத்துடன் உதவி புரிகின்றனர். 

மேலும் மலேசிய இந்திய தலைவர்கள், செய்தி தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள், இந்திய தூதரக அதிகாரிகள் உதவிசெய்கின்றனர்
 
இந்தியர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரிசா போன்ற பல்வேறு மொழி மற்றும் மாநிலம் என்ற அடிப்படையில் குழுக்களாக இணைந்து உள்ளனர். பண்டிகை காலங்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து குடும்பத்துடன் கலந்துகொள்கின்றனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு நட்பை புதுப்பித்து கொள்கின்றனர்.
© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz