மேகதாது அணை விவகாரத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் காங்கிரசும் திமுகவும்தான் - பாஜக மூத்த தலைவர் சி.பி இராதாகிருஷ்ணன் பேட்டி

Saturday 29, December 2018, 20:19:16

தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மக்கள் விரோத கூட்டணி ஸ்டாலின் தலைமையில் சேர்ந்துள்ளது, அந்த கூட்டணிக்கு கடந்த முறை கிடைத்ததை போன்று இந்த முறையும் தோல்வியே கிடைக்கும். தமிழகத்தில் அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்துகிறது என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் சி.பி இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த பாஜக மூத்த தலைவர் சி.பி இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மக்கள் விரோத கூட்டணி ஸ்டாலின் தலைமையில் சேர்ந்துள்ளது, அந்த கூட்டணிக்கு கடந்த முறை கிடைத்ததை போன்று இந்த முறையும் தோல்வியே கிடைக்கும்.

ஆட்சி அதிகாரத்தை பற்றி மட்டுமே கவலைப்பட்டு விட்டு மக்களை பற்றி அக்கறை இல்லாத கூட்டனியாக திமுக மீண்டும் உருவெடுக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டர்கள். வைகோ கூறும் சொற்களை கிளிப்பிள்ளை போன்று ஸ்டாலின் கூறி வருகிறார். கடந்த முறை வைகோவும் மதிமுகவும் எப்படி காணாமல் போனதோ அதே போன்று இந்த முறை திமுகவும் ஸ்டாலினும் காணாமல் போவார்கள்,

மத்தியில் கிச்சடி (திமுக) ஆட்சியோ அல்லது கிச்சடி கூட்டணி ஆட்சியோ தேவையில்லை, நிலையான ஆட்சி தேவை. திமுக லஞ்ச லாவண்யம் இல்லாத கட்சி என யாராலும் கூற முடியாது, மிகப்பெரிய அளவில் ஊழலை அரங்கேற்றியது திமுக, தமிழகத்தில்  திமுகவை விட அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்துகிறது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை தடுக்க திறமை மிகுந்த அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும்.

அரசும் உயர்நீதிமன்றமும் பாரம்பரிய விவகாரங்களில் தலையிட கூடாது கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் கொடுங்கோல் ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. சபரிமலை பிரச்சனையில் கடவுள் நம்பிக்கை அற்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்ற கேரளா கம்யூனிச ஆட்சி பக்தர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துகிறது, கேரளா முதல்வர் அவர் சார்ந்த சொந்த கட்சியை உயிரோடு சவ குழியில் இறக்கும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்.

இந்திய அரசியல் சூழ்நிலையில் கூட்டணியை தவிர்க்க இயலாது. தமிழகத்தில் பாஜக மகத்தான கூட்டணியை உருவாக்கும். மேகதாது அணை வந்தால் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான் என தெரிவித்தார்.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz