ஊடகத்தினர் மீதான இந்துத்துவ அமைப்பினரின் தாக்குதலுக்கு கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

Friday 04, January 2019, 17:24:16

சபரிமலை ஐயப்பன் கோவிலில், எதிர்ப்புகளையும் மீறி இரண்டு பெண்கள் சென்று வழிபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. பல இடங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்தில்  ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். பெண் ஒளிப்பதிவாளர் ஒருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இந்துத்துவ அமைப்பினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இரண்டு நாட்களில் பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க. தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்புகளை புறக்கணிப்பதாகவும் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, மாநில பாஜக பொதுச்செயலாளர் சுரீந்திரன், சபரிமலா கர்மா சமிதி தலைவர் கே.பி.சசிகலா ஆகியோரின் செய்தியாளர் சந்திப்புகளுக்கு ஒருவரும் செல்லாமல் நேற்று புறக்கணித்தனர்.

நடப்பு நிகழ்வுகளை உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடகத்தின் பணியை செய்யவிடாமல் தடுக்கும் இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சென்னைப் பத்திகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதற்கு அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொடுள்ளது

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz