இந்த வருட பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் - நிதியமைச்சகம் தகவல்

Saturday 19, January 2019, 20:14:17

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் ஜெட்லி, தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் உடல்நிலை காரணங்களால் அவர் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜெட்லி நிச்சயம் பங்கேற்பார் எனவும், அவர் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் எனவும் நிதியமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி 3 ம் தேதியன்று, துறை சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதி குறித்த விபரங்களை அனுப்பும்படி அனைத்து துறைகளுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் ஜனவரி 9 ல் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதிய திட்டங்களுக்கான நிதி தேவை குறித்து எதுவும் குறிப்பிட வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz